இது நாடு முழுவதும் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தவர்கள் பலர் டாக்டர்களாகவும், என்ஜீனியர்களாகவும், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகளாகவும் உள்ளனர். ஆன்மீக வழியில் நடத்துப்படும் பள்ளியை இப்படி அவமானப்படுத்தலாமா என்று அவர்கள் கேட்டு வருகிறார்கள்.இதற்கு படத்தின் இயக்குனர் வேல்ராஜ் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அந்த வசனம் வைக்கப்படவில்லை. அந்த பள்ளியில் படித்த தனுஷ் படித்த படிப்புக்கேற்ற வேலை தேடுகிறார். தமிழ் மீடியத்தில் படித்தோம் என்கிற தாழ்வு மனப்பாண்மையை உடைச்சு, அவர் எப்படி முன்னேறுகிறார் என்பதுதான் கதையே. அவரை நேர்மையானவராகவும், உழைப்பாளியாகவும் காட்டியிருக்கிறோம். அந்த பள்ளி மாணவனை கவுரவப்படுத்தியிருக்கிறோம். அதையும் மீறி அந்த வசனம் யார் மனதையாவது புண்படுத்தியிருக்குமானால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்கிறார் வேல்ராஜ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி