செய்திகள்,திரையுலகம் படப்பிடிப்பிற்கு சைக்கிளில் செல்லும் பிரபல நடிகர்!…

படப்பிடிப்பிற்கு சைக்கிளில் செல்லும் பிரபல நடிகர்!…

படப்பிடிப்பிற்கு சைக்கிளில் செல்லும் பிரபல நடிகர்!… post thumbnail image
சென்னை:-ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் மீகாமன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை, பின்னி மில்லில் நடக்கும் இதன் படப்படிப்பிற்கு ஆர்யா தினமும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு சைக்கிளில்தான் வருகிறார்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதாவது: இந்த படத்தின் கதையை நான் எழுதும்போதே இதற்கு ஆர்யாதான் என்று முடிவு செய்து விட்டேன். ஸ்டைலான அதே நேரத்தில் தனியாளாக பத்துபேரை எதிர்கொண்டால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்கிற ஹீரோ வேண்டும் என்பதால் ஆர்யாவை தேர்வு செய்தேன். கதையை ஆர்யாவிடம் சொல்லிவிட்டு வீடு திரும்புவதற்குள் ஓகே சொல்லி மெசேஜ் அனுப்பினார். தயாரிப்பாளர் ஜபக் சார் ஆர்யாவின் கால்ஷீட்டை 5 ஆண்டுகள் கையில் வைத்திருந்தார். பல கதைகளை தவிர்த்த ஆர்யா மீகாமனுக்கு ஓகே சொன்னார். இந்த கேரக்டருக்காக தன்னை கரடுமுரடாக மாற்றிக் கொண்டார்.

சென்னையில் எங்கு ஷூட்டிங் நடந்தாலும் அங்கு சைக்கிளில்தான் ஷூட்டிங் வருவார். அண்ணா நகரிலிருந்து கிழக்கு கடற்கரை சாலைவரை கூட சைக்கிளில் வந்திருக்கிறார். மீகாமன் கேரக்டரின் ரஃபான தோற்றத்தை தக்க வைக்க இந்த சைக்கிள் பயணம். அந்த அளவுக்கு கேரக்டரை ரசிச்சு பண்ணுகிறார் என்றார் மகிழ் திருமேனி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி