கிளாஸ்கோ:-காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி, வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த வால்ஷை எதிர்கொண்டார்.
இதில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார். வால்ஷ் 2-0 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.இந்த பதக்கத்தின் மூலம் இந்தியா இதுவரை 13 தங்கம், 20 வெள்ளி, 15 வெண்கல பதக்கங்களை பெற்று 5-வது இடத்தில் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி