சமீபத்திய படங்களில் சமந்தாவின் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது. தமிழில் விஜய் ஜோடியாக கத்தி படத்திலும், சூர்யா ஜோடியாக அஞ்சான் படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. அஞ்சான் படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடித்த ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுபோல் தெலுங்கில் வந்த ‘அல்லுடு ஸ்ரீனு’ படத்திலும் தாராள கவர்ச்சி காட்டினார்.
தமன்னா, சுருதிஹாசன் போன்றோர் கவர்ச்சிக்கு இறங்கி வந்துள்ளதால் போட்டியை சமாளிக்க சமந்தாவும் கவர்ச்சிக்கு மாறி உள்ளதாக கூறப்பட்டது. அத்துடன் கவர்ச்சியாக நடிப்பதற்கு கூடுதல் சம்பளம் கேட்கிறாராம். டைரக்டர் கதை சொல்லும் போதே படத்தில் தனக்கு கவர்ச்சி சீன்கள் உள்ளதா? என்று கேள்வி எழுப்புவதாகவும் உண்டு என்றால் அதற்கென குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து சம்பளத்தை உயர்த்தி கேட்பதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
சமந்தா மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் கேட்ட தொகையை அப்படியே கொடுத்து விடுகின்றனர். இனி எல்லா படங்களிலும் சமந்தாவை கூடுதல் கவர்ச்சியில் பார்க்கலாம் என்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி