ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளாக உள்ள சுமார் 200 நாட்டின் தலைவர்கள் மற்றும் மந்திரிகள் ஐ.நா. சபையின் 69-வது வருடாந்திர பொது சபை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.வழக்கமான மரபுகளின்படி, இந்த கூட்டத்தின் துவக்க நாளில் நடைபெறும் பொது விவாதத்தின்போது முதலாவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவரை தொடர்ந்து பிரேசில் அதிபரும் உரையாற்றுகின்றனர்.வரும் 27-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொது சபை கூட்டத்தில் உரையாற்றுவார் என்று இந்த கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நாளில் சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களும் உரையாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி