தமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் பவுண்டேசன் இணைந்து நடிகர் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க இருக்கிறது. இதற்கான விழா இன்று மாலை 7.30 மணிக்கு மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பழம்பெரும் இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராம் மற்றும் ஆர்.சி. சக்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
தமிழக கவர்னர் ரோசையா, கமல் ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறார். இயக்குனர் ஆர்.சி. சக்தி, கமல் ஹாசனை வைத்து உணர்ச்சிகள், மனிதனில் இத்தனை நிறங்களா போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி