செய்திகள் உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!…

உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!…

உணவளித்த சிறுவனின் கையை கடித்து குதறிய புலி!… post thumbnail image
பிரேசில்:-பிரேசில் நாட்டு காஸ்காவெல் நகரில் உள்ள பிரேசிலன் பூங்காவிற்கு 11 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் சென்றுள்ளான். பெற்றோர்கள் பூங்காவை சுற்றி பார்த்துள்ளனர். அப்போது 11 வயது சிறுவன் புலி அடைத்து வைக்கப்பட்டு இருந்து கூட்டுக்கு அருகே சென்று பார்த்துள்ளான். அவன் அருகே அவனது மூன்று வயது தம்பியும் நின்றுள்ளனர்.

11 வயது சிறுவன் அபாய வளையத்தை தாண்டியும் சென்று புலியை பார்த்துள்ளான். சிறுவன் தான் வைத்திருந்த உணவை புலிக்கு கொடுத்துள்ளான்.அப்போது புலி அவனது கையை வெடுக்கென கடித்து குதறியது. அப்போது சிறுவன் அலறி துடித்தான். அப்போது அங்கியிருந்த அவனது தந்தை மற்றும் பூங்கா ஊழியர்கள் உடனடியாக வந்து சிறுவனை மீட்டனர்.

உடனடியாக சிறுவனுக்கு பூங்காவில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிறுவனின் பாதி கை துண்டிக்கப்பட்டுள்ளது. அவனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி