அல்ஜியர்ஸ்:-ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில், தலைநகர் அல்ஜியர்சுக்கு 14 கி.மீ. தென் கிழக்கில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது.பூமிக்கு அடியில் 6.2 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது.
இந்த நில நடுக்கத்தால் உயிர்ப்பலியோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இருப்பினும் நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் பதற்றமுடன் கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி