செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அனுஷ்காவிற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு…!

அனுஷ்காவிற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு…!

அனுஷ்காவிற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு…! post thumbnail image
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிக்கும் படம் ‘தல55’ . தற்போது த்ரிஷா , ‘பேபி’ அனிகா நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் இந்த ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்காக யூத் லுக்கில் நடித்தார் அஜித். அந்த ஷெட்யூல் முடிந்து, தற்போது அடுத்த ஷெட்யூலில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க இருக்கிறார் அஜித்.

தமிழில் ‘லிங்கா’ , தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ ,’பாஹுபாலி’ மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் இந்த படம் என ஒரே நேரத்தில் நடித்து வரும் அனுஷ்கா தற்போது இந்த படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டியுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ் , தெலுங்கு என பெரிய படங்களில் நடித்து வருவதால் அனுஷ்காவின் தேதிக்காக ‘தல 55’ பட டீம் தற்போது காத்திருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி