அதைத் தொடர்ந்து கணவரது குடும்பப் பெயரையும் அவர் நீக்க முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டார்கள். இது பற்றிய செய்திகளுக்கு பல பாலிவுட் பிரபலங்களே அவர்களது சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்தனர். அவரவர்க்கென்று குடும்பம் இருக்கிறது, அதைப் பற்றியெல்லாம் தற்போது தாறுமாறாக எழுதி வருகிறார்கள் என்றெல்லாம் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள்.
இதனிடையே இந்த செய்திகளைப் பற்றி ஹிருத்திக் ரோஷனும் அவருடைய கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
அனைத்தும் ஜோடிக்கப்பட்ட செய்திகள், என் அன்புக்குரியவர்களை இழிவு படுத்துகிறார்கள், என் பொறுமையையும் சோதிக்கிறார்கள் என கோபத்துடன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்களது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், ஹிருத்திக் – சுசானே இடையே பணமோ, சொத்தோ ஒரு பிரச்னையே அல்ல. இதை அவர்கள் நீதிமன்ற வழிகாட்டுதலுக்கே விட்டுவிட்டார்கள். ஹிருத்திக்கைப் பொறுத்தவரை அவரது குடும்பத்தினர் நன்றாக இருக்க வேண்டும். சுசானேவும் சுதந்திரமான ஒரு பெண், அவரும் ஏற்கெனவே சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். அவர்களுக்குள் பணத்தால் ஒரு பிரச்னை என்பது ஜோடிக்கப்பட்ட, மோசமான ஒன்று, என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி