செய்திகள்,திரையுலகம் ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடும் நடிகர் வடிவேலு!…

ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடும் நடிகர் வடிவேலு!…

ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடும் நடிகர் வடிவேலு!… post thumbnail image
சென்னை:-முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதற்கு அடுத்து விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது விஷாலுடன் பூஜை படத்திலும், விஜய் உடன் சிம்பு தேவன் இயக்கும் படத்திலும் நடிக்கும் ஸ்ருதிஹாசன் இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இந்தப் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க வடிவேலுவை அணுகினார்கள். கதையைக் கேட்ட வடிவேலு சம்பளம் பற்றி கூட அதிகம் பேசாமல் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார்.

அந்தப்படத்தில் வடிவேலுவுக்கு ஸ்ருதிஹாசனை ஒரு தலையாய் காதலிக்கும் வேடம். அவரது ஒருதலை காதலில் கனவுப்பாடலும் உண்டாம். அந்தக் கனவுப்பாடலில் ஸ்ருதிஹாசன் உடன் சேர்ந்து டூயட் பாட இருக்கிறார் வடிவேலு. ஸ்ருதிஹாசனுக்கு கதை சொல்லும்போது வடிவேலு உடன் நடனமாட வேண்டும் என்ற விஷயத்தை தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் கோகுல். அதற்கு ஸ்ருதிஹாசனும் ஓகே சொல்லி விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி