சமீபத்தில் இயக்குனர்களுக்கு இந்த படத்தின் பிரத்யேக காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த இயக்குனர்கள் பாரதிராஜா, பார்த்திபன், பிரபுசாலமன், சமுத்திரக்கனி, சுசிகணேசன், ராம், ராஜு முருகன், அறிவழகன் உள்ளிட்டோர் படம் சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டினர். தமிழகம் முழுவதும் 200 தியேட்டர்களில் நேரடியாக ஆள் படத்தை திரையிட உள்ளோம்.
இந்த நிலையில் சேரனின் ‘சி2எச்’ நிறுவனம் எங்கள் ஆள் திரைப்படத்தை டி.வி.டி. மூலம் விற்பனை செய்ய உள்ளதாக செய்திகள் பரவி வருவது கண்டு அதிர்ச்சியடைந்தோம். இச்செய்தி உண்மையானது அல்ல சேரன் நிறுவனத்துடன் நாங்கள் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. ஆள் படத்தின் எவ்வித உரிமையையும் எந்த நிறுவனத்துக்கும் கொடுக்கவில்லை. தியேட்டர்களில் நேரடியாகவே ‘ஆள்’ படத்தை திரையிட உள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி