சென்னை:-நடிகர் தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் தமிழக உரிமையை வாங்கிய மதன், அந்தப் படத்துக்கு பிரம்மாண்டமானமுறையில் விளம்பரங்களை செய்து படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்தார்.கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வருகிறார் தனுஷ்.
எனவே அவர் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மதன் இத்தனை கோடிகளை வாரி இறைத்து விளம்பரம் செய்கிறாரே என்று திரையுலகில் பலரும் கேலி பேசினார்கள். ஆனால் அனைவரது கணிப்பையும் மீறி வேலையில்லா பட்டதாரி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக செங்கல்பட்டு ஏரியாவில் வசூல் மழை பொழிகிறதாம். தனுஷிடமிருந்து 12 கோடிக்கு வாங்கப்பட்ட வேலையில்லா பட்டதாரி படம் இதுவரை 20 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி