சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா இருவரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ஒரு முக்கியமான வேடத்திற்கு ஒரு திறமையான நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என கௌதம் மேனன் யோசித்துக் கொண்டிருக்கும்போது அஜீத் சொன்ன பெயர்தான் தலைவாசல் விஜய்.இரண்டு பேரும் இதற்கு முன்பு பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதுவும் காதல் கோட்டை படத்தில் இருவரும் சேர்ந்து ஆடிய ‘கவலைப்படாதே சகோதரா…’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது.
அஜீத் தன்னை மறக்காமல் அழைப்பதை நினைத்து பெருமிதம் அடைந்தாராம் தலைவாசல் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி