அதே சமயம் பல சிறிய படங்கள் திரையரங்குகளுக்கு வாடகை செலுத்தும் முறையில் திரையிடப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் படங்களைப் பொறுத்தும் அவற்றிற்கான வினியோக முறை நிர்ணயிக்கப்படுகிறது. பல புதிய தயாரிப்பாளர்களுக்கு இந்த முறை சரியாகப் புரியாததாலும் நஷ்டம் அடையவும் வாய்ப்பு ஏற்படுகிறது. பலருக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது.இந்த சூழ்நிலையில் தெலுங்குத் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா திரைப்படங்களை ‘ஏலம்’ முறை மூலம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். அடுத்து அவர் பிரபல நடிகர் மோகன் பாபு மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து இயக்கும் படத்தில்தான் இந்த முறையை அறிமுகப்படுத்தப் போகிறார்களாம்.
இந்த ஏல முறையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இதற்காக தனியான இணையதளம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார்கள். வரும் சனிக்கிழமை வரை ஆன்லைன் மூலமும் ஏலம் நடைபெற உள்ளதாம். தெலுங்குத் திரையுலகின் வினியோக முறையில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி