சென்னை:-பழம்பெரும் நடிகர் ரங்காராவ். தமிழ், தெலுங்கு படங்களில் குணசித்திர வேடங்களில் கொடிகட்டி பறந்தவர். மாயாபஜார் படத்தில் கடோத்கஜனாக நடித்து “கல்யாண சமையல் சாதம்…” என பாடி பட்சணங்களை அவர் காலி செய்யும் காட்சி இன்றைக்கும் பிரபலம்.
இப்போது அவரது பேரன் ஜூனியர் ரங்காராவ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் நடித்த தெலுங்கு படமான மிஸ்டர் 7ஐ தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக நினைக்கிறார் ஜூனியர் ரங்காராவ். தாத்தாவுக்கு தமிழ் நாட்டில் எவ்வளபு மதிப்பு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அந்த மதிப்பு குறையாத வகையில் நடந்து கொள்வேன். மிஸ்டர் 7 தெலுங்கில் நான் ஹீரோவாக நடித்த படம். அதன் பிறகு தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறேன். தமிழிலும் வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார் ஜூனியர் ரங்காராவ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி