ஜெர்மனி:-ஜெர்மனியில் கோதுமை வயலில் தோன்றிய மர்ம வளையம் ஒன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. ஒரே இரவில் உருவான இந்த வளையம் கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இந்த வளையத்தை புனிதமாக கருதும் பலர், இங்கு அமர்ந்து தியானத்தில் ஈடுப்படுகின்றனர். இந்த மர்ம வளையத்தை ஒரு சிலர் வேற்று கிரக வாசிகள் பூமிக்கு ஒரு குறியீட்டின் மூலம் ஏதோ ஒரு மறைமுக செய்தியை போல கருதுகின்றனர்.
ஒருசிலர்களோ இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான், ஆனால் ஒரு இரவில் இதனை கனகட்சிதமாக செய்து முடித்தது கடினமான காரியம் தான் என்கின்றனர். வயலின் உரிமையாளர் இந்த மர்ம வளையத்தால் தன் வயலுக்கு ஏற்பட்ட சேதத்தை ஈடுகட்ட பார்வை வருவோரிடம் பணம் வசூலிக்க தொடங்கியிருக்கிறார். இது ஒரு ஏமாற்று வேலை என நினைத்தாலும், வயலை பார்வை ஈடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி