செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…

7.ராமானுஜன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.53,436 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.முண்டாசுபட்டி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த முண்டாசுபட்டி
திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.35,424 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 6ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
5.இருக்கு ஆனா இல்ல:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த இருக்கு ஆனா இல்ல திரைப்படம் சென்னையில் மொத்தம் 52 ஷோவ்கள் ஓடி ரூ.1,35,453 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.அரிமா நம்பி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த அரிமா நம்பி திரைப்படம் சென்னையில் மொத்தம் 112 ஷோவ்கள் ஓடி ரூ.7,94,260 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.திருமணம் எனும் நிக்காஹ்:-
கடந்த வாரம் வெளியான திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படம் சென்னையில் மொத்தம் 135 ஷோவ்கள் ஓடி ரூ. 24,71,886 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.சதுரங்க வேட்டை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த சதுரங்க வேட்டை திரைப்படம் சென்னையில் மொத்தம் 164 ஷோவ்கள் ஓடி ரூ.24,51,080 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை
தக்கவைத்துள்ளது.
1.வேலையில்லா பட்டதாரி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சென்னையில் மொத்தம் 376 ஷோவ்கள் ஓடி ரூ.1,13,57,760 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி