லக்னோ:-ஒடிசாவை சேர்ந்த சோஹன்லால் வால்மிகி என்பவர் தனது மனைவியை உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் பண்டல்கந்த் பகுதியில் உள்ள ஜாராகர் கிராமத்தில் கடந்த வாரம் நடந்த சந்தையில் ஏலம் விட்டார். சந்தையில் அதே கிராமத்தை சேர்ந்த பிரிஜ் மோகன் கோரி என்பவர் ரூ. 25 ஆயிரம் ரூபாய்க்கு அந்த பெண்ணை ஏலத்தில் எடுத்து தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். பெண் ஒருவர் ஏலம் விடப்பட்ட இந்த சம்பவத்தை அந்த மாவட்ட கலெக்டரும் போலீசாரும் மறுத்துள்ளனர்.
மாறாக ஏலத்தில் விடப்பட்ட அந்த பெண்ணும் பிரிஜ்மோகன் என்பவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றனர்.ஆனால் அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலெக்டர் மற்றும் போலீசாரின் கருத்துகளில் பொய் இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் அவர்கள் கூறுகையில், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களில் இருந்து பெண்களை, குறிப்பாக ஜார்கண்ட், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டு விலைக்கு விற்கப்படுவதாக கூறினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி