சென்னை:-தமிழ்நாட்டு பெண்ணாக இருந்தபோதும் தான் நடிக்கிற படங்களில் ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் வகையில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.அவரைப்பொறுத்தவரை கவர்ச்சி, ஆபாசம் என்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்றாகி விட்டது. அப்படிப்பட்ட ஸ்ருதிஹாசன், தனது நடிப்பு மட்டுமின்றி, மற்ற நடிகைகள் யாராவது ஆபாசமாக நடித்திருந்தாலும் அதை அளவில்லாமல் புகழ்ந்து தள்ளுவதையும் வழக்கமாகக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க எழுத்தாளர் ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய செக்ஸ் நாவலான ‘பிப்டி ஷெடஸ் ஆப் க்ரே’ என்ற நாவலைத்தழுவி தற்போது ஹாலிவுட்டில் ஒரு காமசூத்ரா படம் தயாராகியுள்ளது. இதன் டிரைலர் சமீபத்தில் இணையதளங்களில் வெளியிட்டபோது உலக நாடுகளில் உள்ள ஏராளமான நடிகர்-நடிகைகள் அதற்கு லைக் செய்துள்ளனர்.
இந்த டிரைலரைப்பார்த்த ஸ்ருதிஹாசன், இந்தியில் வெளியான காமசூத்ராவை மிஞ்சும் வகையில் இப்படம் உள்ளது. அதிலும் ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் என்னை வியக்க வைத்துள்ளது. படத்தில் இருக்கும் ஒலி அமைப்பு, காட்சியமைப்பு எல்லாமே அமேஷிங்காக இருந்தது என்று தனது சார்பில் கருத்து பரிமாறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி