செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் புவி வெப்பமயமாதலை தடுக்கும் எறும்புகள்!… விஞ்ஞானிகள் தகவல்…

புவி வெப்பமயமாதலை தடுக்கும் எறும்புகள்!… விஞ்ஞானிகள் தகவல்…

புவி வெப்பமயமாதலை தடுக்கும் எறும்புகள்!… விஞ்ஞானிகள் தகவல்… post thumbnail image
அமெரிக்கா:-புவி வெப்பமயமாதல், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். அப்படி இருக்கையில், நம் காலடியில் நடமாடும் எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எறும்புகள், மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் சார்ந்த மணற்சத்துகளை சிதைக்கின்றன. இதனால், காற்றில் கலந்துள்ள கார்பன் டைஆக்சைடு படிப்படியாக குறைகிறது. இதன்மூலம், புவி வெப்பமயமாதல் குறைந்து, புவி குளிரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி