செய்திகள்,திரையுலகம் ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!…

ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!…

ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ படக்குழு!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார் விஜய்.இப்படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார். இதில் நல்லவனாக அரவிந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இன்னொரு விஜய் ஆண்ட்ரூ என்கிற பெயரில் வில்லனாக வருகிறார்.

மேலும் சமந்தா வேணி கேரக்டரிலும், சதீஸ் தாணு என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.கொல்கத்தாவில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் என பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில டாக்கி போர்ஷன் மற்றும் இரண்டு பாடல்களை படமாக்கினால் ‘கத்தி’யின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம்.

பாடல் காட்சிகளை பிடிக்க, விஜய், சமந்தா, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஐரோப்பா பறக்க விருக்கின்றனர். வரும் தீபாவளி வெளியீடாக படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். அதற்காக கத்தி படக்குழு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி