சென்னை:-கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அங்குள்ள ராமோஜி பிலிம் சிட்டி, அன்னபூர்ணா ஸ்டுடியோ மற்றும் ஐதராபாத்தில் உள்ள சில இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
நேற்றுடன் ஐதராபாத் ஷெட்டியூல் முடிவடைந்து படக்குழுவினர் அங்கிருந்து புறப்படுகிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அநேகமாக அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாலும், ரஜினியுடன் முதன் முறையாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாலும் படத்திற்கு வழக்கம் போலவே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி