வாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், உலகின் மிகப்பெரிய குடியரசு நாடுகளான அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டுறவை உறுதிபடுத்துவது என்ற வாக்குறுதியை நிறைவேற்றி, இரு தரப்பு நட்புறவை ஆழப்படுத்தி, விரிவுப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட அதிபர் ஒபாமா எதிர்நோக்கியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி