எனக்கும் ‘செவாலியே சிவாஜிகணேசன்‘ அவர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. எனது அம்மா தீவிரமான திரைப்பட ரசிகை. அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருக்கிறார். அன்று இரவே அவருக்கு பிரசவ வலி எடுத்து நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த பின் அவர் எனக்கு ஷங்கர் என பெயர் வைத்தார். நான் பிறந்த அன்று என் அம்மா பார்த்த படத்தில் சிவாஜி அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் சங்கர். அதையே எனது பெயராக அம்மா வைத்து விட்டார்கள்.
எனக்கும் சிவாஜி அவர்களை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவின் அப்பாவாக அவரைத்தான் முதலில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஒரு நடிப்புச் சிங்கத்துக்கு தீனி போடும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. அதனால் அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். அவரை இயக்க முடியவில்லையே என்ற குறை இருந்தாலும் ரஜினி அவர்கள் நடித்த படத்திற்கு ‘சிவாஜி’ என பெயர் வைத்து என் ஆசையை தீர்த்துக் கொண்டேன், என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி