இதையடுத்து அவரை புக் பண்ண பல இயக்குனர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தனது சம்பள விசயத்தில் எப்போதும் போலவே இப்போதும் பிடிவாதமாகவே இருந்து வருகிறார் நயன்தாரா. அதாவது, எந்த காரணம் கொண்டும் 2 கோடி சம்பளத்தில் இருந்து இறங்கமாட்டேன் என்று அதிரடியாக பேசி வருகிறார் நயன்தாரா.ஆரம்பம், ராஜாராணி படங்கள் வெற்றி பெற்றதையடுத்து அவர் நடித்த இது கதிர்வேலனின் காதல், நீ எங்கே என் அன்பே போன்ற படங்கள் தோல்வியடைந்தபோதும், தனது நிலையில் உறுதியாக இருக்கும் நயன்தாரா, தற்போது நடித்து வரும் தனி ஒருவன், இது நம்ம ஆளு படங்கள் கண்டிப்பாக தனக்கு ஹிட்டாக அமையும் என்று நம்புகிறாராம்.
அதோடு, அடுத்தபடியாக சூர்யா நடிக்கும் மாஸ் படத்திலும் முக்கிய நாயகியாக நடிப்பதால் புதிய படங்களுக்கு தன்னை புக் பண்ண வருபவர்களிடம், இதுதான் எனது ரேட் தர முடியுமென்றால் புக் பண்ணுங்க. இல்லேன்னா போய்க்கிட்டே இருங்க என்று தடாலடியாக பேசுகிறாராம் நயன்தாரா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி