அத்துடன் அவள் படுத்திருந்த தலையணையும், மெத்தை விரிப்பும் கருகி இருந்தன. நல்லவேளையாக மெத்தை முழுவதும் தீப்பிடிக்க முன் அவன் எழும்பியதால் உயிர்தப்பினாள்.இந்த சம்பவம் குறித்து கூறும்போது போனின் பாட்டரி அதிக வெப்பமடைந்ததால் இந்த தீ விபத்து நேர்ந்திருக்கக்கூடும் என்று அந்தப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். சாம்சங் நிறுவனத்தினரோ அந்த பெண் உபயோகித்து வந்த இரண்டாம்தர பேட்டரியே இந்த விபத்திற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று தங்களது பதிலில் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் சேதமடைந்த ஸ்மார்ட்போன், தலையணை, மெத்தை விரிப்பு ஆகிய அனைத்தையும் மாற்றித் தருவதாகவும் உறுதி அளித்த இந்நிறுவனம் தங்களின் தயாரிப்பு தரம் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறியுள்ளது.அதுமட்டுமின்றி, இத்தகைய போன்களைப் பயன்படுத்தும்போது தேவையான காற்றோட்டம் அளிக்கப்பட வேண்டும் என்பதுவும், படுக்கை போன்ற பொருட்களால் இவை மூடப்பட்டிருக்ககூடாது என்பதுவும் தங்களின் பயனர் கையேடுகளிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதையும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி