செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்…

ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்…

ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது!… ஆய்வில் தகவல்… post thumbnail image
அமெரிக்கா:-நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகமாகிகொண்டே போகிறது இதனால் சமுதாயத்தில் காற்றுமாசுபாடு ஏற்பட்டு மனித இனத்திற்க்கே அழிவுபாதையில் இட்டுசெல்கிறது.இதில் இருந்து விடுபடவேண்டும் என்றால் மரம் வளர்த்து மனித இனத்தை காப்பதே இதன் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுவதாக அமெரிக்க ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.காற்றுமாசுபாட்டால் வருடத்திற்க்கு 1 பில்லியன் மனித ஆரோக்கியத்திற்க்கு கேடுவிளைவிப்பதாகவும், இதனால் அமெரிக்காவில் 80% மக்கள் நகர்புறங்களில் மரம் வளர்க்கும் முயற்சியில் அமெரிக்க மக்கள் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தனர்.மரத்தின் நன்மையால் மனிதர்களுக்கு தூய்மையான ஆக்சிஜன் கிடைக்க வழி செய்கிறது.ஓசோன் படலம் ஓட்டை ஆகாமால் சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா ஒளி கதிர் வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.காற்று மாசுபாட்டால் மனிதர்களுக்கு சுகாதார சீர்கேடுகளை விளைவிக்கிறது.

இதயநோய், நுரையீரல் தொடர்பான வியதிகள்,ரத்த நாளங்களின் நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல்வேறு சுகாதார சீர்கேடுகளை காற்று மாசுபாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு மனித இனம் ஆளாவததாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.கிராமபுறங்களை விட நகர்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மரம் வளர்ப்பது அவசியம் என்று தெரிவித்தனர்.இதனால் சுகாதார சீர் கேடு ஏற்படமால் இருக்க மரத்தை நாம் காப்பாற்றினால் நம்மை மரம் காப்பாற்றும் என்று தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி