இப்படத்தின் நாயகியாக நடித்த இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்ணான்டஸ் கூட மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் அவர் நடித்து வெளிவந்த படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டுவது மூன்றாவது முறையாக நடந்துள்ளதாம். இதற்கு முன் ஜாக்குலின் நடித்த ‘ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2’ ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தன. இருந்தாலும், அந்த படங்களில் சில முன்னணி நடிகர்களுடன் ஜாக்குலினும் ஒரு நடிகையாக நடித்திருந்தார். ஆனால், இந்த ‘கிக்’ படத்தில்தான் ஜாக்குலின் தனி ஹீரோயினாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். இருந்தாலும் இவ்வளவு பெரிய ஒரு படத்தில் தன்னால் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஜாக்குலினுக்கு இருந்ததாம்.
இந்த படத்தில் நாயகியாக நடிக்க நான் ஒப்பந்தமாவேன் என நிறைய பேர் எதிர்பார்க்கவேயில்லை. மற்றவர்களைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னாலேயே இப்படி ஒரு பெரிய வாய்ப்பு நமக்குக் கிடைக்குமா என்று நம்பவில்லை. என்னுடைய நடிப்பை சல்மான் கான் மிகவும் பாராட்டினார். நடிக்க ஆரம்பிக்கும் போது சல்மானிடம் ஒரு எனர்ஜி தானாக வந்து விடுகிறது. அதனால் என்னாலும் சிறப்பாக நடிக்க முடிந்தது, என சல்மான் புகழ் பாடுகிறார் ஜாக்குலின்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி