செய்திகள்,விளையாட்டு காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!…

காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!…

காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!… post thumbnail image
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 7 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கம் பெற்று உள்ளது. நேற்று மாலை வரை இந்தியா பதக்க பட்டியலில் 4–வது இடத்தில் இருந்தது. அதன்பின் தென் ஆப்பிரிக்கா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் அடுத்தத்தடுத்து தங்கம் பதக்கங்களை வென்று பட்டியலில் முன்னேறின. இந்த 3 நாடுகள் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முறையே 4,5,6–வது இடங்களை பிடித்தன. இதனால் இந்தியா தற்போது 7–வது இடத்தில் இருக்கிறது.

நேற்றைய போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் (புரோன்) பிரிவில் இந்திய வீரர் ககன் நரங் மயிரிழையில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டார். அவர் வெள்ளி பதக்கத்தை வென்றார். ககன் நரங் தங்கம் பதக்கம் வென்று இருந்தால் இந்தியா 8 தங்கப்பதக்கத்துடன் 6–வது இடத்தை பிடித்து இருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி