செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மனைவி வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை…!

மனைவி வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை…!

மனைவி வேடத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை…! post thumbnail image
தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வந்தாலும் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் ‘மழை’, தனுஷுடன் ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ரஜினியுடன் ‘சிவாஜி’, விஜயுடன் ‘அழகிய தமிழ் மகன்’ என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ‘ரௌத்திரம்’. அதன்பிறகு கடந்த 3 வருடங்களாக தமிழில் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருக்கிறார்.

தற்போது இந்தி படமான ‘ஓமைகாட்’ தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் வெங்கடேஷுக்கு மனைவியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘மனம்’ படத்திலும் நாகார்ஜூனாவிற்கு மனைவியாகவும் நடித்தார். தொடர்ந்து மனைவி வேடத்தில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், மனைவி வேடத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தால் நான் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் தயங்குவதில்லை. இது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. இவ்வாறு கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி