மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனர் இயக்கியிருந்தார். பகத் பாசில், நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை பிவிபி சினிமா பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. இதில் தமிழில் ஆர்யாவும், தெலுங்கில் நாக சைதன்யாவும் நடிக்கிறார்கள்.
இரண்டு மொழிக்கும் நன்கு அறிமுகமான சித்தார்த், பகத் பாசில் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்த நஸ்ரியா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறாராம்.
இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் பொம்மரிலு பாஸ்கரன் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி