மும்பை:-பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்து வெளிவந்த ‘கிக்’ திரைப்படம் முதல் நாளில் சுமார் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் ரவி தேஜா நடிக்க ‘கிக்’ என்ற பெயரில் வெளிவந்த இந்தப் படம் தமிழில் ஜெயம் ரவி நடிக்க ‘தில்லாலங்கடி’யாக வெளிவந்து சுமாரான வெற்றியையே பெற்றது. ஹிந்தியில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.
பாலிவுட்டில் வெளிவந்து முதல் நாளில் வசூல் சாதனை புரிந்த படங்களில் ‘கிக்’ நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆமீர்கான் நடித்து வெளிவந்த ‘தூம் 3’ படம் 36 கோடி ரூபாயையும், ஷாரூக்கான் நடித்து வெளிவந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படம் 33 கோடி ரூபாயையும், சல்மான் கான் நடித்து 2012ம் ஆண்டில் வெளிவந்த ‘ஏக் தா டைகர்’ 32 கோடி ரூபாயையும் வசூல் செய்தது. தற்போது ‘கிக்’ 25 கோடி ரூபாயை வசூல் செய்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி