இப்படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக நடிக்கிறாராம். அதற்காக வேட்டி, சட்டை, கூலிங் கிளாஸ் கண்ணாடி என தனது கெட்டப்பையே மாற்றப்போகிறாராம் சிவகார்த்திகேயன்.
அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பவருக்கும் சாதாரண கதாபாத்திரம் கிடையாதாம். தெருவில் இறங்கி மற்றவர்களுடன் குழாயடி சண்டை போடும் அளவுக்கு இருக்குமாம். இவர்மீதுதான் சிவகார்த்திகேயனுக்கு காதல் வருகிறதாம்.
இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் 16-ந் தேதி தொடங்க இருக்கின்றனர். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி