கிளாஸ்கோ:-20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதே போட்டியில், மற்றொரு இந்திய வீரர் ரவி கட்லு வெள்ளிப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் பிரான்கோயிஸ் எட்டூண்டி வென்றார். 22 வயதான சதீஷ் சிவலிங்கம் 149+179 என மொத்தம் 328 கிலோ எடையை தூக்கி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி