அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்போ ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் தலைப்பு வைக்க வேண்டும் என்பதாக உள்ளது. இதை ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் மூலம் அஜித்தின் காதில் போட்டிருக்கிறார்கள். அஜித் இதை கௌதம் மேனனிடம் சொல்ல, அவரது கருத்தையும் கவனத்தில் கொண்டு தலைப்பு வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தல55 என்ற தற்காலிகமாக குறிப்பிடப்பட்டு வரும் இந்தப் படத்தில் திரிஷா ஒரு பெண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இப்படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் பெயர் ரியாவாம்!
அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளையே தற்போது படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் அஜித் – த்ரிஷா ஜோடிக்கான ஒரு ரொமான்டிக் பாடல் ஒன்று இடம்பெறுகிறது. சில படங்களில் பிரிந்த கௌதம் மேனன் ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். தவிர அஜித் படம் என்பதால் கூடுதல் சிரத்தை எடுத்து இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அஜித் – த்ரிஷாவுக்கான பாடலை தாமரை எழுத, பாடகர் கார்த்திக்கின் குரலில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்தத் தகவலை ஹாரிஸ் ஜெயராஜே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி