தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பதை மைய கருத்தாகக் கொண்டு நகரும் இந்த நெருங்கி வா முத்தமிடாதே திரைப்படத்தின் உள்ளே நான்கு வாழ்க்கை கதைகள் பின்னி பிணைந்து இருக்கின்றன. உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக திரைக்கதை அமைந்துள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவு வினோத் பாரதி, படத்தொகுப்பு தேசிய விருது பெற்ற சாபு ஜோசப், இசை மேட்லி பிளூஸ், சண்டை பயிற்சி மிரட்டல் செல்வா, கலை-இயக்கம் ராஜா மற்றும் குமார் கவனிக்கின்றனர். இப்படத்தின் பாடல்களை நா.முத்துக்குமார் எழுத சங்கர் மாகாதேவன், சின்மயி உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், கும்பகோணம், நெய்வேலி, மலேசியா ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப் பட வேண்டியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி