நியூயார்க்:-அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் முன் எச்சரிக்கை மையங்கள் அந்நாட்டின் மகிழ்ச்சியான நகரங்கள் குறித்து பொது மக்களிடம் ‘சர்வே’ மேற்கொண்டன. அதில் நியூயார்க் நகரம் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற நகரம் அல்ல என பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு மிகப்பெரிய தொழில் நகரம். அமெரிக்காவின் தூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு மேன் காட்டன், புரூக்ளின், ஸ்டேட்டன் தீவு, புரோன்ஸ் என்று 4 கிளை நகரங்கள் உள்ளன. இருந்தும் இங்கு வாழும் மக்கள் திருப்தியாக இல்லை. இங்கு எல்லா வசதிகள் இருந்தாலும் பல குறைகள் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.அதே நேரத்தில் ரிச்மான்ட், விரிஷினியா ஆகிய நகரங்கள் மிக மகிழ்ச்சிகரமான நகரங்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளன. இங்கு வாழ்பவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி