செய்திகள்,விளையாட்டு இந்தியா -இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…

இந்தியா -இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்!…

இந்தியா -இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்!… post thumbnail image
சவுத்தம்டன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானதில் நடைபெற்ற 2–வது டெஸ்டில் இந்திய அணி 95 ரன்னில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி சவுத்தம்டனில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.

லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றதை போல இந்திய அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று 2–0 என்ற முன்னிலை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், ரகானே, முரளிவிஜய், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தார்கள். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு இந்த டெஸ்டிலும் அதிகமாக இருக்கிறது.நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டூவர்ட் பின்னி இடத்தில் ரோகித் சர்மா இடம் பெறலாம். கடந்த 2 டெஸ்டிலும் ஸ்டூவர்ட் பின்னி 20 ஓவர்களே வீசினார். இதனால் கூடுதல் பேட்ஸ்மேன் என்ற முறையில் ரோகித்தை களம் இறக்கலாம் என்ற யோசனை இருக்கிறது.

அதே நேரத்தில் முதல் டெஸ்டில் அணியை காப்பாற்றியவர் என்ற பெருமை ஸ்டூவர்ட் பின்னிக்கு இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து அணி மாற்றம் இருக்கும். காம்பீர், அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி ரன் குவிக்க முடியாமல் நெருக்கடியில் உள்ளார். கடந்த 2 டெஸ்டில் 4 இன்னிங்சில் விளையாடி 34 ரன்களே எடுத்துள்ளார். இதனால் அவர் ரன் குவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதே போல ஷிகார் தவானின் பேட்டிங்கும் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.முரளிவிஜய், ஷிகார் தவான், கேப்டன் டோனி, புஜாரா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் சிறப்பாக உள்ளனர்.

இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் சென்று தொடரை சமன் செய்ய போராடும். அந்த அணியில் மாற்றங்கள் இருக்கும். கேப்டன் குக் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 110–வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 109 டெஸ்டில் இந்தியா 21 போட்டியிலும், இங்கிலாந்து 40 போட்டியிலும் வெற்றி பெற்றன. 48 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இருந்து போட்டி நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி