சென்னை:-இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் கவனம் தற்போது பாலிவுட் சினிமா பக்கம் திரும்பியுள்ளது. இந்தியில் ருனால் தேஷ்முக் என்பவர் இயக்கியுள்ள,’ராஜா நட்வர்லால்’ என்ற த்ரில்லர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள், இணையதளத்தில் வெளியானதை அடுத்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் ‘லைக்’ செய்துள்ளனராம்.
இதையடுத்து, ஏ.ஆர்.ரகுமானுக்கு வரவேற்பு கொடுத்தது போன்று, இப்போது யுவனுக்கும் அங்குள்ள சில இயக்குனர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதனால், இனி தமிழ் படங்களுக்கு இணையாக, இந்தி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க போகிறார் யுவன் ஷங்கர் ராஜா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி