ஐதராபாத்:-தெலுங்கு படவுலகில் புதிதாக தந்தை ஆகி இருப்பவர் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி. ராமாராவ். என்.டி. ராமாராவ் குடும்ப வாரிசான இவரது மனைவி லட்சுமி பிரணதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். இது தனது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான நாள் என்று ஜூனியர் என்.டி. ஆர் தெரிவித்துள்ளார்.
அவரிடம், உங்கள் தாத்தா மறைந்த நடிகர் என்.டி. ராமாராவ் மறுபிறப்பாக உங்கள் குழந்தையாக பிறந்திருக்கிறாரா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, என்.டி. ராமாராவ் போன்று மற்றொரு நபர் இருக்க முடியாது. அவர் மீண்டும் பிறப்பதில்லை என்று கூறியுள்ளார்.இது குறித்து ஜூனியர் என்.டி. ஆர் கடந்த 4 வருடங்களுக்கு பின்பு டுவிட்டர் செய்தியில் தொடர்பு கொண்டு கூறுகையில், நீண்ட நாட்களாக டுவிட்டர் பக்கத்தில் இல்லை. இன்று டுவீட் செய்ய வேண்டும் என நான் உணர்கிறேன். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் எனது நன்றிகள். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி