ஏற்கனவே ‘சந்திரமுகி’, ‘கஜினி’, ‘பில்லா’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன. காதல் சர்ச்சைகளுக்கு பிறகு நடித்த ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’, படங்களும் வெற்றிகரமாக ஓடின. இப்போது தெலுங்கில் 4 படங்கள் கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்கள் நடிக்காவிட்டாலும் கூடுதல் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
நயன்தாராவுக்கு அடுத்து இரு மொழிகளிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக காஜல் அகர்வால் உள்ளார். தெலுங்கில் மூன்று படங்களிலும் இந்தி, தமிழில் தலா ஒரு படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். மூன்றாவதாக ஹன்சிகாவும், நான்காவதாக சமந்தாவும் கூடுதல் சம்பளம் வாங்குகிறார்கள். குறைந்த பட்சம் ரூ.1 கோடியில் இருந்து அதிகபட்சம் ரூ.2 கோடிவரை இவர்கள் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி