உடல் நிலையைக் காரணம் கருதி கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களை சந்திக்காத ரஜினிகாந்த் கடந்த பிறந்த தினத்தின் போது, அவருடைய வீட்டில் ஒரு பொதுமேடையில் ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். ஆனால், ரசிகர்களை தனித்தனியாக சந்திப்பதை தவிர்த்து வந்தார். இப்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கும் போது அங்குள்ள ரசிகர்களை தினமும் சந்தித்து வருகிறாராம். அதோடு அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொள்கிறாராம். இது இங்குள்ள ரசிகர்களை வருத்தமடைய வைத்திருக்கிறது.
‘லிங்கா’ படப்பிடிப்புக் குழுவினரும், மற்ற தெலுங்குத் திரையுலக நட்சத்திரங்களும் ரஜினி, ரசிகர்களைச் சந்திப்பது குறித்து ஆச்சரியப்படுகிறார்களாம். இவ்வளவு உயர்ந்த பின்னரும் ரசிகர்களை அவர் மதிப்பது பெருமைக்குரிய விஷயம் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி