இதில் பங்கு பெறும் 12 அணிகளில் 11 அணிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12-வது அணியாக தற்போது கரீபியன் பிரிமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி தகுதி பெறும்.
13-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை தகுதிச் சுற்று நடைபெறும். 17-ந்தேதியில் இருந்து லீக் போட்டிகள் தொடங்கும்.முதல் லீக் போட்டியில் ஐ.பி.எல். சாம்பியன் கொல்கத்தா அணியும், 2010-ம் ஆண்டு சாம்பியன் லீக் 20 ஓவர் போட்டி சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கொல்கத்தா, இரண்டாம் இடம் பெற்ற பஞ்சாப் மற்றும் 3-வது இடம் பெற்ற சென்னை அணிகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளன. 4-வது இடம் பெற்ற மும்பை அணி தகுதி சுற்றில் விளையாடி வெற்றி பெற்றால் லீக் பிரிவில் இடம்பெறும்.சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் ‘ஏ’ பிரிவிலும், பஞ்சாப் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இறுதிப்போட்டி அக்டோபர் 4-ந்தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 36 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி