இந்தியில் கங்கணா ரணாவத் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர். இதன் ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி வைத்துள்ளார் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன்.
இப்படம் 4 மொழிகளிலும் ரீமேக் செய்யவிருப்பதால், நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையை நடிக்க வைக்கவேண்டும் என்ற முனைப்பில் பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நடிகைகளிடம் இப்படத்தில் நடிக்க போதுமான காலஅவகாசம் இல்லாததால் கடைசியில் நடிகை சார்மியை அணுகி உள்ளனர். இந்தியில் ஹிட்டான படம் என்பதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம் சார்மி. பிற மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி