என் வாழ்க்கை துணைவராக வருபவரை தேர்வு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. அதை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். எனக்கு பொருத்தமானவரை கண்டு பிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன். திருட்டு கல்யாணம் செய்வது எனக்கு பிடிக்காது. மாப்பிள்ளை தேர்வானதும் அதை ரசிகர்களுக்கு சொல்லி விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன்.
இந்தியில் அக்சய்குமாருடன் நடித்தது இனிமையான அனுபவம். இருபத்தைந்து வருடமாக அவர் சினிமாவில் இருக்கிறார். ஒவ்வொரு படத்தையும் தனது முதல் படம் மாதிரியே எண்ணி வேலை செய்கிறார். தினமும் அதிகாலையிலேயே எழுந்து உடற்பயிற்சிகள் செய்கிறார். எனக்கு அந்த பழக்கம் இருந்தது இல்லை.
தாமதமாகத்தான் எழுந்திருப்பேன், அக்சய் குமாரை பார்த்து நானும் இப்போது அதிகாலையிலேயே எழுந்து உடற்பயிற்சிகள் செய்ய துவங்கியுள்ளேன். இவ்வாறு தமன்னா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி