அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அஜீத் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா இருவரும் நடிக்கின்றனர்.
நாளுக்கு நாள் இப்படத்தின் சுவாரஸ்யமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது இப்படத்தில் இன்னொரு அஜீத் இணைந்திருப்பதாக செய்தி வந்துள்ளது. அவர் பெயர் தேவி அஜீத். மலையாள நடிகையான இவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். தேவி அஜீத் ஒரு சில மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளவர். இவர் இதற்கு முன் தமிழில் சூறையாடல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தல 55 படத்தில் நடிப்பது குறித்து தேவி அஜீத் தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் கௌதம் மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி