எப்போதுமே கமல்ஹாசன் ஒரு சீரியசான படம் ஒன்றில் நடித்தால் அதற்கடுத்து நகைச்சுவை கலந்த ‘லைட்டான’ படம் ஒன்றில் நடிப்பது வழக்கம். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த ‘விஸ்வரூபம்’ படம் மிகவும் சீரியசான கதை கொண்ட படமாக இருந்ததால், தொடர்ந்து ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடுவதையும் அவர் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள். அதனால்தான் ‘உத்தம வில்லன்’ படத்தில் குறுகிய காலத்தில் நடித்து முடித்து படத்தை வெளியிட முடிவு செய்ததாகவும் சொல்கிறார்கள்.
‘உத்தம வில்லன்’ படத்தில் இந்தக் கால நடிகராகவும், எட்டாம் நூற்றாண்டு கலைஞராகவும் கமல்ஹாசன் நடித்துள்ளார். சினிமாவில் உள்ள சில பழக்க, வழக்கங்களையும், திரை மறைவில் நடக்கும் சில விஷயங்களையும் இந்தப் படத்தில் கிண்டலடித்திருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது. படத்தின் டீசரை சில வாரங்களுக்கு முன் வெளியிட்டு உடனே அதை திரும்பப் பெற்று விட்டார்கள். இதனால் எழுந்த தேவையற்ற சர்ச்சையை நீக்கும் வகையில் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்தலாம் என்றும் யோசித்து வருகிறார்களாம். அநேகமாக அடுத்த மாதம் இசை வெளியீடு நடக்கலாம் என்றுத் தெரிகிறது. ‘உத்தம வில்லன்’ தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி