செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் கொம்பன் படத்திலிருந்து விலகிய யுவன்…!

கொம்பன் படத்திலிருந்து விலகிய யுவன்…!

கொம்பன் படத்திலிருந்து விலகிய யுவன்…! post thumbnail image
கார்த்தி-லட்சுமிமேனன் நடிப்பில் உருவாகும் புதிய படம் கொம்பன். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். மேலும், ராஜ்கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் கார்த்தி அருவா மீசை கெட்டப்பில் நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. தற்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கொம்பன் படத்தில் இசையமைப்பதை ஜீ.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பருத்திவீரனுக்கு பிறகு கார்த்தி நடிக்கும் கிராமத்து படம் என்பதால், அப்படத்திற்கு இசையமைத்திருந்த யுவனேயே இந்த படத்திலும் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், இப்படத்திலிருந்து அவர் திடீரென விலகியதற்கு காரணம் ஏதும் தெரியவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி