இருப்பினும் தனது மகனுடன் அறிமுகமான விக்ரம் பிரபு நடித்த கும்கி, அரிமா நம்பி போன்ற படங்கள் பேசப்பட்டு அவர் மார்க்கெட்டில் பேசப்படும் நடிகராகி விட்டதால், அவரைப்போன்று தனது மகனையும் வளர்த்துக்கொண்டு வரவேண்டும் என்று தற்போது களத்தில் வரிந்து கட்டிக்கெண்டு நிற்கிறார் கார்த்திக்.தற்போது வை ராஜா வை, சிப்பாய், இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்து வரும் கெளதமுக்கு, இந்திரஜித் ஆக்சன் கதையாக அமைந்துள்ளதாம். அதனால் இந்த படத்தில் கெளதமின் தனித்திறமையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக, அவருக்கு அதிக உற்சாகம் கொடுத்து நடிக்க வைத்து வரும் கார்த்திக், இந்த படத்தில் அஜீத்தின் பில்லா-2வில் வில்லனாக நடித்த சுதன்சு பாண்டே வில்லனாக நடிப்பதால், இது கெளதமுக்கு மிகப்பெரிய ஆக்சன் படமாக அமையும் என்று கூறி வருகிறார்.
அதோடு, சண்டை காட்சிகளில் கெளதமின் நடிப்பு பளிச்சிட வேண்டும் என்பதற்காக, அவருக்கு ஒரு பைட் மாஸ்டரை நியமித்து பல மாதங்களாக பயிற்சி கொடுத்து இப்போது களத்தில் இறங்கி விட்டிருக்கிறார். ஆக, அப்பா பாணியில் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதை குறைத்து விட்டு, வில்லன்களுடன் குஸ்தி போடுவதில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கியிருக்கிறார் கெளதம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி